Search This Blog

Tuesday, September 5, 2017

நல்ல ஆசிரியர் தேவையா..? நல்லவர் ஆசிரியராக தேவையா..?

அனைவருக்கும் வணக்கம்.

நான்  இன்று வரை எனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் பெரிதாய் செய்துள்ளேனா என்று தெரியாது. ஆனால் என்னால் இயன்ற ஏதேனும் என் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யவேண்டும் என்ற உந்துதல் இப்போதும் எனக்கு உண்டு. இந்த தேசப்பற்றும் சமூக அக்கறையும் என்னுள் விதைத்தது யார் என்ற கேள்வி எழுந்தது.